Sunday, 22 December 2019

திண்டிவனத்தில் மாவட்ட அளவிலான காய்கறி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு தோட்டக்கலை சார்பாக நடைபெற்றது*


திண்டிவனத்தில் மாவட்ட அளவிலான காய்கறி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு தோட்டக்கலை துறை சார்பாக நடைபெற்றது இன் நிகழ்ச்சியில் மாவட்ட தோட்டகலை துறை இயக்குனர் திருமதி.ரா.ராஜாமணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்,
 திண்டிவனம் சார் ஆட்சியர் அனு கலந்துகொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார் காய்கறி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் தமிழக அரசு எந்த வகையில் உதவி செய்கின்றது என்றும் விவசாயிகள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அலுவலர்கள் எப்படி உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினார் அவரை தொடர்ந்து 
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திரு. ஆர். எம்.இராமசாமி,விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் திரு. கென்னடி ஜெபக்குமார் ஆகியோர்  விவசாயிகளுக்கு சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை கல்லூரி பேராசிரியர் முனைவர்.துரைசாமி அவர்கள் தொழில்நுட்ப உரை ஆற்றினார் அவரை தொடர்ந்து, பேராசிரியர்.முனைவர்.வை.பரமசிவம்,
பேராசிரியர்.முனைவர்.கே.எ.சண்முகசுந்தரம், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர் முனைவர். எம். பிரபு, வேலூர் வேளாண்மை அலுவலர் திரு.கே.சண்முகம்,விழுப்புரம் மாவட்ட வேளாண்மை அலுவலர் திரு.என்.சரண்ராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினார் இறுதியில் மரக்காணம் தோட்டக்கலை உதவி இயக்குநர் திரு.இரா. வெங்கடேசன் நன்றி கூறினார்  இதில்  தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நிருபர் : திண்டிவனம் 


No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...