குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக இன்நெட் சேவையை மாநில அரசுகள் முடக்கின. ஆனால் போராட்டம் பற்றிய தகவல்களை பரப்புவதற்காக ஆப்லைனில் தகவல் அனுப்பும் வசதி கொண்ட ஆப்.,களை போராட்டக்காரர்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சில பகுதிகளில் இது வன்முறையாகவும் மாறி உள்ளது. இதனால் வன்முறை, போராட்டம் பரவாமல் இருக்க இன்டர்நெட், மொபைல் சேவைகளை, போராட்டம் உச்சத்தில் இருக்கும் மாநிலங்களில் மத்திய, மாநில அரசுகள் முடக்கி உள்ளன. இன்டர்நெட் முடக்கப்பட்டதால் போராட்டம் குறித்த தகவல்களை பரப்புவதற்காக ஆப்லைன் ஆப் பயன்பாட்டிற்கு போராட்டக்காரர்கள் மாறி உள்ளனர். ஹாங்காங் போராட்டக்காரர்கள் பயன்படுத்திய இந்த முறையையே இவர்களும் கையாண்டு வருகின்றனர்.
┈┉┅━•• 🌿👨🏻💻🌷👩🏻💻 🌿••━┅┉┈
No comments:
Post a Comment