ராமேஸ்வரம்: வாழக்கை ஒருமுறை என்பதை உணர்ந்து உடல்நலம் பேணுங்கள் என்று ராமநாதபுரம் இளைஞர்களுக்கு நடிகர் அமீர்கான் அறிவுரை கூறியுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் படப்பிடிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமைபகலில் ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடிக்கு வந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் சந்தித்துப் பேசினார்.
அப்போது ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்குமாறு காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.
அப்போது கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் நடிகர் அமீர்கான் ஆங்கிலத்தில் பேசும்போது, 'ராமநாதபுரம் மாவட்டம் சிறப்பு வாய்ந்தது. ஆகவே இங்குள்ள இளைஞர்கள் உடல் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்தவேண்டும். போதைப் பொருள்களை தவிர்த்து வாழ்க்கையை சிறந்ததாக்குவது அவசியம். வாழ்க்கை
ஒருமுறை என்பதை உணர்ந்து உடல் சுகாதாரத்தை பேணவேண்டும். ஆகவே தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை இளைஞர்கள் பயன்படுத்தக்கூடாது என்றார்.
இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய நடிகர் அமீர்கானுக்கு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் நன்றி தெரிவித்தார்.

No comments:
Post a Comment