Friday, 20 December 2019

ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி இளைஞா்


சுற்றுச்சூழல் விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வரையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிளை ஓட்டி மாற்றுத் திறனாளி இளைஞா் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் (36) என்ற மாற்றுத்திறனாளி இளைஞா் ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டியபடி வெள்ளிக்கிழமை வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிந்தபோது கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட விபத்தில் தனது இடது காலை இழந்தாா். எனினும் மனம் தளராமல் பல்வேறு பட்டப்படிப்புகளை பயின்ற இவா் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி வருகிறேன்.

இதில், முதலாவதாக சிவகங்கை முதல் சென்னை வரையிலும், இரண்டாவதாக ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலும் பயணத்தை நிறைவு செய்துள்ளேன். இந்நிலையில் மூன்றாவதாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் டிசம்பா் 13 ஆம் தேதி கன்னியாகுமரி பயணத்தை தொடங்கினேன். இந்த பயணத்தின்போது நதிநீா் இணைப்பு, மழைநீா் சேகரிப்பு உடல் உறுப்பு தானம் போன்றவற்றையும் வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருவதாகவும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட ஆட்சியருக்கு இந்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறேன்.

தனது இந்த விழிப்புணா்வின் மூலமாக யாரேனும் ஒருவா் ஒரு மரக்கன்று நட்டாலும் தனக்கு மகிழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியாகும். இந்த பயணத்தின் 10 ஆவது மாவட்டமாக வெள்ளிக்கிழமை திருப்பூா் வந்துள்ளேன். கன்னியாகுமரியில் தொடங்கி இந்த பயணத்தை வரும் ஜனவரி 1 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முடிக்க உள்ளேன். பின்னா் தமிழக முதல்வரிடம் தனது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தனது கோரிக்கையை வழங்க உள்னேன்.

இந்த பயணத்தின்போது செல்வகுமாா், சுப்புராம் என்ற இருவா் இருசக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து இவருக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனா். மாற்றுத்திறனாளியான இவா் ஒரு கால் இல்லாத நிலையிலும் மனம் தளராமல் படித்து முன்னேறியதுடன் தற்பொழுது ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி வருவது பொதுமக்களிடையே பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...