Friday, 20 December 2019

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்: கோரக்பூரில் வன்முறை

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவலர்களை நோக்கி கற்களை வீசியும், வாகனங்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். போராட்டக்காரர்கள் வீசிய கற்களை எடுத்து காவல்துறையினரும், போராட்டக்காரர்கள் மீது வீசிய காட்சிளையும் பார்க்க முடிந்தது.

போராட்டம் காரணமாக, கோரக்பூரில் கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...