Friday, 20 December 2019

டெல்லி போராட்டத்தில் போலீஸ்காரருக்கு துணிச்சலாக பூ கொடுத்த பெண் ; பாஜகவுக்கு வாக்களித்ததற்காக வருந்துகிறேன்

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையும், அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை வீச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் நடைபெறுவதை அடுத்து, மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

டெல்லியில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி செங்கோட்டை, மண்டி மாளிகை மற்றும் ஜந்தர் மந்தர் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் பெருமளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஜவகர்லால் நேரு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பகவான் தாஸ் சாலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது. போராட்டத்தி ஈடுபட்ட மானவி ஒருவர் போலீஸ்காரருக்கு துணிச்சலுடன் ரோஜாப்பூ வழங்குவது போல் அந்த அப்புகைப்படம் வெளியாகி உள்ளது.

21 வயதாகும் அந்த மாணவியின் பெயர் ஸ்ரேயா பிரியாம் ராய். டெல்லி பல்கலைக்கழகத்தில் (டி.யு) வரலாறு முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

அவர் கூறும்போது, நான் ஒரு ஆர்வலர் அல்ல. நான் ஒரு கலைஞனாக விரும்பும் மாணவி. நாடு முழுவதும் மாணவர்களுக்கு எதிரான போலீசாரின் மிருகத்தனத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்த செயல் இருந்தது. இதனால் புகழ் கிடைத்தது வரவேற்கத்தக்கது என்றாலும், போராட்டத்திற்கான காரணத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஒரு நண்பரிடமிருந்து கேட்ட பின் நானும் போராட்டத்தில் கலந்து அதற்கு எதிராக குரல் கொடுக்க வந்தேன் என கூறினார்.

தான் தனியாக ஜந்தர் மந்தருக்குச் போராட வந்ததாகவும் எந்தவொரு குழுவிலும் அங்கம் வகிக்கவில்லை என்றும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவரை போலீசார் அடித்ததால் ரோஜாக்களை வழங்கியதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் அவர் கூறும்போது "நான் பீகாரின் பாட்னாவிலிருந்து வருகிறேன், அங்கு பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் தேர்தலின் போது கூட்டணி வைத்திருந்தன. மறைமுகமாக நான் பாஜகவுக்கு வாக்களித்தேன். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, ஆனால் பாஜக கொள்கைகள் அதை சாதி மற்றும் மதம் அடிப்படையில் பிரிக்கின்றன. அதை நிறுத்த வேண்டும்.

பாஜக மற்றும் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, அண்டை நாடுகளில் தங்கள் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்படும் சமூகங்களை பாதுகாப்பதே குடியுரிமை சட்ட திருத்தம் என்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் அல்லது இலங்கை தமிழர்கள் மற்றும் பலர் இதில் ஏன் சேர்க்கப்படவில்லை? இது இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளையும் உள்ளடக்கியது என கூறினார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...