Wednesday, 25 December 2019

டெல்லியில் கடும் குளிர் - மக்கள் அவதி


புதுடெல்லி,

இன்று காலை தலைநகர் டெல்லியில் கடுமையான குளிர் நிலவியது. அங்கு காலையில் வெப்பநிலை 44.6 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. உடலை நடுங்க வைக்கும் குளிர் காற்றும் வீசியது. இதனால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

எட்டாவது நாளாக கடும் குளிர் நிலவுவதால் இரவு நேரத்தில் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. கடுங்குளிரால் நடைபாதையில் வசிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடும் குளிர் நிலவியது என்றும், இனி அடுத்து வரும் நாட்களின் குளிரின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதேபோல் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு பனித்துகள்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் காஷ்மீர் முழுவதும் சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...