ஆரணி: "ஏன் மாமா இப்படி காலங்காத்தாலேயே குடிச்சிட்டு வர்றீங்க" என்று மருமகள் நாக்கை பிடுங்கி கொண்டு கேள்வி கேட்கவும் மாமனார் தற்கொலை செய்து கொண்டார்.. இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்துபோன மருமகளும் விஷத்தை குடித்து உயிரை மாய்த்து கொண்டார்!
ஆரணியை அடுத்துள்ள கிராமம் அணியாலை... இங்கு வசித்து வந்தவர் வேலு.. 65 வயது விவசாயி.. இவருக்கு குமார் என்ற மகனும், சிவசங்கரி, மைதிலி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
வேலுவுக்கு பழப்பழக்கம் இருந்துள்ளது.. இதனால் தினமும் ராத்திரி ஆனால், தண்ணி அடித்துவிட்டுதான் வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், நேற்று விடிகாலையிலேயே தண்ணி அடித்துள்ளார்.. வீட்டுக்குள் நுழையும்போதே கோணல்மாணலாக நடந்து வருவதை கண்டு, குமாரின் மனைவி கலைவாணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனால் மாமனாரிடம் சென்று, "காலங்காத்தாலயே இப்படி குடிச்சிட்டு வரணுமா.. ஊருக்கு பெரிய மனுஷனா இருந்துட்டு, இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே, நல்லாவா இருக்கு?" என்று கேள்வி கேட்டுள்ளார். இது மாமனாருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது.. அதனால், வீட்டில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.. இதை பார்த்து பதறிய குடும்பத்தினர் உடனடியாக வேலுவை ஆரணி ஆஸ்பத்திரியிலும், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தும், பலனில்லை.. வேலு இறந்துவிட்டார்.
இதனால் மருமகள் கலைவாணி பயந்து நடுங்கினார்.. மாமனார் இறந்ததற்கு தன்னை எப்படியும் போலீசார் அழைத்து விசாரிப்பார்கள் என்று நினைத்து, அவரும் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். அவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டும், கலைவாணி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே வீட்டில் மாமனாரும் - மருமகளும் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment