சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக மற்றும் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம், நந்தியார் தலைப்பு பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும், ஈரோடு, தூத்துக்குடி, திருச்செந்தூரில் தல 6 மீட்டர் மழையும் பதிவாகி இருக்கின்றது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment