Sunday, 15 December 2019

"இத்தாலி கண்ணாடி அணிந்திருக்கும் ராகுல் காந்திக்கு, இந்தியாவின் வரலாறு தெரியாது" - அமித்ஷா கர்ஜனை!



ஜார்கண்ட் மாநிலம், கமரா அருகே உள்ள கிரிதி நகரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆகவேதான் அவர்கள் நாட்டில் கலவரத்தை தூண்டி விடுகிறார்கள்.
ராகுல் காந்தி வெற்று இரைச்சலை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு இந்த நாட்டின் வரலாறு தெரியவில்லை. இந்த நாட்டின் பண்பாடு தெரியவில்லை. இந்த நாட்டின் பழக்கவழக்கங்கள் தெரியவில்லை. ஆகவேதான் பெண்களை அவ மதிக்கின்ற வகையில் நடந்து கொள்கிறார்.
இத்தாலி கண்ணாடி அணிந்திருக்கும் ராகுல்காந்திக்கு இந்தியாவின் வரலாறு தெரியாது.
காங்கிரஸ் கட்சி, கடந்த காலத்தில் நக்சலைட் தீவிரவாதிகளை வளர்த்தது. காஷ்மீரை தீவிரவாதிகளின் கைகளில் ஒப்படைத்து இருந்தது.
முத்தலாக் சட்டத்தை நாங்கள் நிறைவேற்றியதால், எங்களை முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...