Sunday, 15 December 2019

கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.12-க்கு தக்காளி: வெங்காயம் கிலோ ரூ.100 ஆக நீடிப்பு


கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.12 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெங்காயம் கிலோ ரூ.100 விலையில் நீடித்து வருகிறது.
கோயம்பேடு சந்தைக்கு தமிழக பகுதிகளைவிட, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லையோர பகுதிகளில் இருந்து அதிக அள வில் தக்காளி வருகிறது. அப்பகுதி களில் இந்த ஆண்டு கோடையில் நிலவிய வறட்சி காரணமாக தக் காளி பயிரிடும் பரப்பு குறைந்து, சந்தைக்கு தக்காளி வரத்தும் குறைந்தது. அதன் காரணமாக அதன் விலை கிலோ ரூ.50 வரை உயர்ந்தது.
கடந்த வாரம்கூட கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு தென் மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக பெய்த நிலையில், தமிழக எல்லையோர ஆந்திரா மற் றும் கர்நாடக மாநில பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப் பட்டது.
தற்போது அறுவடை தொடங்கி யுள்ளதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரண மாக, கடந்த 4 மாதங்களாக உயர்ந்திருந்த தக்காளி விலை நேற்று கிலோ ரூ.12 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரம் வரை கோயம் பேடு சந்தையில் பெரிய வெங் காயம் கிலோ ரூ.160-க்கு விற் கப்பட்டு வந்தது. எகிப்து வெங் காயம் வருகையாலும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்திருப் பதாலும் அதன் விலை ரூ.100 ஆக குறைந்தது. கடந்த சில தினங்களாக அதே விலை யில் நீடித்து வருகிறது.
மற்ற காய்கறிகளான சாம்பார் வெங்காயம் ரூ.150, கத்தரிக்காய், பீட்ரூட் தலா ரூ.35, உருளைக் கிழங்கு ரூ.26, அவரைக்காய், வெண்டைக்காய் ரூ.40, முள்ளங்கி, பாகற்காய், புடலங்காய் தலா ரூ.30, பீன்ஸ் ரூ.55, முட்டைக் கோஸ் ரூ.15, கேரட் ரூ.45, முருங் கைக்காய் ரூ.250, பச்சை மிள காய் ரூ.28 என விற்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, ''தக்காளி வரத்து அதி கரித்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்த இரு மாதங்களுக்கு தக்காளி விலை உயர வாய்ப்பில்லை. வெங்காயம் வரத்தும் அதிகரித்து வருகிறது. அதன் விலை அடுத்த சில தினங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது'' என்றனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...