Friday, 27 December 2019

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஆர்வமுடன் மக்கள் வாக்களிப்பு



தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற அனைத்து இடங்களிலும் வாக்கு சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இதற்காக ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 959 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேற்பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறும் ஊரகப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு பாதுகாப்புப் பணியில் 60 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...