Thursday, 26 December 2019

மீண்டும் செட் ஆகுமா.. விரல் நடிகருடன் மறுபடியும் காதலை புதுப்பிக்க பிளான் பண்ணும் நடிகை!

சென்னை: மீண்டும் கம்பேக் ஆகியுள்ள விரல் நடிகருடன் பிரேக் அப் செய்த காதலை மறுபடியும் புதுப்பிக்க அந்த பிரபல நடிகை யோசித்து வருகிறாராம்.

சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என காதலை உதறித் தள்ளிய அந்த பிரபல நடிகைக்கு அவர், நினைத்தது போல அடுத்தடுத்து நல்ல படங்கள் அமையவில்லை.

உச்சத்தில் இருந்த தனது மார்க்கெட் அந்த நடிகருடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.

இந்நிலையில், மீண்டும் அந்த விரல் நடிகருடன் தனது காதலை புதுப்பிக்க அந்த பிரபல நடிகை யோசித்து வருவதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அந்த பிரபல நடிகைக்கு அவ்வப்போது தனது படங்களில் வாய்ப்பு தந்து அந்த நடிகையை முன்னணி நாயகி லிஸ்ட்டில் வைத்திருந்த ரோமியோவும், தற்போது அவரை கண்டு கொள்வதை தவிர்த்து வருகிறார்.

இதனால், அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும், முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தும் கொஞ்ச நஞ்சம் இருந்த மார்க்கெட்டும் கட கடவென சரிந்து அதள பாதாளத்திற்கு அந்த நடிகையை கொண்டு சேர்த்துள்ளது.

பொதுவாக கோலிவுட்டில் படங்கள் ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால், சட்டென்று டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என நடிகைகள் படையெடுத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வழி பார்ப்பார்கள், ஆனால், அதுவும் இந்த நடிகைக்கு நடக்காமல் போன, நிலையில் இங்கேயே சாதித்துக் காட்டுகிறேன் என அடம்பிடித்து வருகிறாராம் அந்த பிரபல நடிகை.

நம்பர் நடிகையை தொடர்ந்து தானும் லீடு ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த பிரபல நடிகை நடித்த படம் சேல் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், விரல் நடிகரை கெஸ்ட் ரோலில் போட்டு தனது படத்தை மார்க்கெட் செய்ய அந்த நடிகை போட்ட ஐடியா ஒர்க்கவுட் ஆகியுள்ளதாம்.

பிசினஸ் ஐடியா கை கொடுத்துள்ள நிலையில், தங்களுக்குள் இருந்த பழைய காதலையும் புதுபிக்கும் முயற்சியில் அந்த நடிகை ஈடுபட்டு வருகிறாராம். விரல் நடிகருக்கு வீட்டில் நடந்த பெண் பார்க்கும் படலங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், பிரேக் அப் ஆன காதல் மீண்டும் துளிர்க்க வாய்ப்பு இருப்பதாகவே பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...