Apple iPhone XR world’s best smartphone in Q3 2019 : இந்த ஆண்டில் வெளியான ஸ்மார்ட்போன்களில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் எது என்ற பட்டியலை நாம் நேர்த்து பார்த்தோம். இந்த ஆண்டின் சிறந்த, அனைவரையும் கவர்ந்த ஸ்மார்ட்போனக்ள் எது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போன்கள் தான் இந்த ஆண்டு அனைவரின் மனதையும் கவர்ந்த ஸ்மார்ட்போன்கள் என்று அறிவித்துள்ளது கவுண்டர்பாய்ண்ட் ரிசர்ச். மேலும் இந்த ஆண்டின் மூன்று காலாண்டுகளிலும் சிறப்பாக விற்றுத்தீர்த்த போன்களில் ஒன்றாகவும் இந்த ஸ்மார்ட்போன் அறியப்பட்டுள்ளது. உலக ஸ்மார்ட்போன்கள் அரங்கில் இந்த ஆண்டில் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையில் 3% இடத்தை பிடித்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் 749 டாலர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் வழங்கிய சிறப்பம்சங்களும் கூட இதன் விற்பனைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். 720 பிக்சல் டிஸ்பிளே மற்றும் சிங்கிள் ரியர் ஃபேஸிங்க் கேமராவுடன் விற்பனைக்கு வந்தது இந்த ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் வீக்கான விற்பனை தளமாக கருதப்பட்ட இந்தியாவிலும் கூட சக்கப்போடு போட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை. ரூ.49,990-க்கு இந்த போன் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. சலுகைகள் அனைத்தும் போக இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் ரூ.45 ஆயிரத்திற்கு பெற்றுக் கொள்ளலாம்.
ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்
சாம்சங் கேலக்ஸி ஏ10
சாம்சங் கேலக்ஸி ஏ50
ஓப்போ ஏ9
ஆப்பிள் ஐபோன் 11
ஓப்போ ஏ5எஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ20
ஓப்போ ஏ5
சியோமி ரெட்மி 7ஏ
ஹூவாய் பி30
மேலும் படிக்க :Best Budget Smartphones 2019 : இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?
No comments:
Post a Comment