Thursday, 26 December 2019

சரசரவென உயர்ந்த தங்கத்தின் விலை: ஆபரணத் தங்கம் சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து ரூ.29,584-க்கு விற்பனை...வெள்ளி விலையும் உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தங்கத்தோடு வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (டிசம்பர் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3698 ஆக உள்ளது. நேற்று 3,665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று 29,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 264 ரூபாய் உயர்ந்து 29,584-ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை ரூ.3,996 ஆக இருக்கிறது. நேற்று 3,975 ரூபாய்க்கு விற்பனையானது.8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 31,800 ரூபாயிலிருந்து இன்று 31,968 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 168 ரூபாய் உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலை!

சென்னையில் இன்று வெள்ளியும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளி விலை நேற்று கிலோ ஒன்று 49,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 400 ரூபாய் உயர்ந்து 49,800 ரூபாய்க்கும் கிராம் ஒன்று 40 காசுகள் உயர்ந்து 48 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...