சண்டிகார்,
‘பாரத்நெட்’ மூலம் கிராமங்களுக்கு அளிக்கப்படும் இலவச ‘வை-பை’ வசதி வருகிற 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். அரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி என்ற இடத்தில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் மேற்கண்ட தகவலை தெரிவித்த அவர், பாரத்நெட் திட்டத்தின் கீழ் தற்போது வரை 48 ஆயிரம் கிராமங்களுக்கு ‘வை-பை’ வசதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
பாரத்நெட் கண்ணாடி இழை மூலம் நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதை 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளாக அதிகரிப்பது மத்திய அரசின் இலக்கு என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment