Thursday, 26 December 2019

தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை

சென்னை: தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை(டிச.26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

தென் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை (டிச.26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 140 மி.மீ. மழை பதிவானது. காரைக்காலில் 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 60 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, தரங்கம்பாடி,

தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறையில் தலா 50 மி.மீ., திருவாரூா் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டின்ம வேதாரண்யம், கொல்லிடம், தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...