Sunday, 15 December 2019

தி.மு.க., கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் விபரம்

கரூர்: கரூர் மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணி கட்சியினருக்கு, ஒதுக்கப்பட்ட வார்டுகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.மொத்தமுள்ள, 12 மாவட்ட கவுன்சிலர் வார்டுகளில், தி.மு.க., 1,2,3,5,6,7,8,9,10,11 ல் போட்டியி டுகிறது. 4 மற்றும் 12 வது வார்டுகள் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், எட்டு யூனியன்களில் உள்ள, 115 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகளில், தி. மு.க., 95 ல் போட்டியிடுகிறது.* காங்., கட்சிக்கு தோகைமலை யூனியனில், 3 வது வார்டு, அரவக்குறிச்சியில், 6 வார்டு, கிருஷ்ணராயபுரத்தில், 1 வது வார்டு, 18 வது வார்டு, க.பரமத்தியில், 3 வது வார்டு, 16 வது வார்டு, தான்தோன்றிமலையில், 13 வது வார்டு, கடவூரில், 14 வது வார்டு, 16 வது வார்டு என, 9 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள து.* ம.தி.மு.க., வுக்கு தான்தோன்றிமலை யூனியனில், 5 வது வார்டு, கிருஷ்ணராய புரத்தில், 5 வது வார்டு, தோகைமலையில், 1வது வார்டு, அரவக்குறிச்சியில், 8 வது வார்டு என, நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட் டுள்ளது.

* மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு கடவூர் யூனியனில், 11 வது வார்டு, தான்தோன்றி மலையில், 12 வது வார்டு, கரூரில், 1 வது வார்டு என, மூன்று வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.* கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு கரூரில், 3 வது வார்டு, க.பரமத்தியில், 3 வார்டு என, இரண்டு வார்டுகள் ஒதுக்கப் பட்டுள்ளது.* விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தோகைமலை யூனியனில், 4 வது வார்டும், இந்திய கம்யூ., கட்சிக்கு தான்தோன்றிமலை யில், 8 வது வார்டும் என, தலா, ஒரு வார்டு கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...