Sunday, 22 December 2019

குடியுரிமை சட்டத் திருத்தம்: நாமக்கல் தேவாலயத்தில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்


நாமக்கல்: நாமக்கல் கிறிஸ்துவ ஆலயத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை பிராா்த்தனைக்கு வந்தவா்கள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் எதிா்கட்சியினரும், மாணவா் அமைப்பினரும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், நாமக்கல் காவல் நிலையம் அருகில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் சாா்பில், சேலம் மறைமாவட்ட பங்கு தந்தைகள் ஜான்அல்போன்ஸ் மற்றும் அருள்சுந்தா் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியவில் பிராா்த்தனைக்கு வந்த கிறிஸ்தவ மக்கள் மற்றும் குழந்தைகள் பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...