Sunday, 22 December 2019

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் மூவர் பலி


நவலூர் குட்டப்பட்டு:திருச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சோக சம்பவம் நிகழந்துள்ளது.

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு அருகே கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி ஒப்பாயி (68). அவரது மகன் ராம்மூர்த்தி (43), பேரன் குணசேகரன் (23), ( ராம்மூர்த்தியின் மகன்) மூவரும், அவர்களுக்குச் சொந்தமான, நவலூர் குட்டப்பட்டு பகுதியில், உள்ள நிலத்தில் விவசாய வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று பிற்பகலில், வயல் பகுதியின் மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததில், வயலில் கிடந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. அந்த மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அங்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...