Thursday, 19 December 2019

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க தனிப்படை - சென்னை காவல்துறை

சென்னை போக்குவரத்து காவல்துறையில் ரோந்துப் பணிக்காக மூன்று இ-பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் வாகன நெரிசல் கடுமையாக உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்காக போக்குவரத்து காவல்துறையினருக்கு மூன்று நவீன 'இ'-பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மெரினாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு சேவையை துவக்கி வைத்தார்.

ஒருவர் நின்றுகொண்டு பயணம் செய்யும் வகையிலான இந்த வாகனம் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்களின் வசதிக்கேற்றவாறு இந்த வாகனத்தில் மைக், வாக்கிடாக்கி, காவல் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள் தொடர்ந்து 8 மணிநேரம் இயங்கும் திறன் கொண்டது. சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த வாகனம் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இத்திட்டம் தி.நகர், பாண்டிபஜார் ஆகிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்படையில் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள் இருப்பார்கள். முதற்கட்டமாக சென்னையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில்லை என்று உணரும் பட்சத்தில் 75300 01100 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், Chennai city police என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கும் தகவல் அளிக்கலாம் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும் dccwc.chennai@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...