Tuesday, 17 December 2019

ஐ.எஸ்.எல். கால்பந்து: நடுவர் மீது மும்பை அணியின் பயிற்சியாளர்

பெங்களூரு,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த போட்டி முடிவில் மும்பை சிட்டி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா பத்திரிகையாளர் மத்தியில் ஒரு அறிக்கையை வாசித்தார். அவர் கூறுகையில், ‘மும்பை சிட்டி அணியின் வீரர் செர்ஜி கெவினை பார்த்து போட்டியின் போது நடுவர் துர்கி அல்குதார் குரங்கு என்று திட்டி இருக்கிறார். இது போன்ற செயல்களை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. வெளிநாட்டு வீரர்களை மதிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போட்டி அமைப்பாளர்கள் வலியுறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...