Saturday, 21 December 2019

`இருவரையும் ஒப்பிடுகையில் கமலின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்!’- கார்த்தி சிதம்பரம்


சிவகங்கைத் தொகுதி எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருந்தார்.

கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கிராமங்களில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டார். `எல்லாத்தையும் செய்ய முடியாது. என்னால் முடிந்ததைச் செய்வேன்’ என இயல்பாகப் பேசிவந்தார். ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டதற்குப் பின் மக்களை சந்திக்கவில்லை எனப் புகார்கள் எழுந்தன.

தொகுதிப் பக்கமே வரவில்லை என கார்த்தி சிதம்பரத்திற்கு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுவந்தன. இந்நிலையில், காரைக்குடி அழகப்பா நடைபயிற்சியாளர் சங்கத்திற்கு வருகை தந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சிதம்பரம், "ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இருந்திருக்க மாட்டார்.

நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இருப்பதால், காக்கையின் நிறம் வெள்ளை என்றுகூட தீர்மானம் நிறைவேற்றுவார்கள். இந்தி பேசாதவர்கள் நாட்டில் இருக்கக்கூடாது என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

கமல்ஹாசன் ஒரு மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டவர். பல விஷயங்களில் அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், ரஜினி அப்படி இல்லை. அவர் எதையும் வெளிப்படுத்துவது கிடையாது. எனவே, இருவரையும் ஒப்பிடுகையில் கமல்ஹாசனின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

ரஜினி கூறிய ஆட்சி மாற்றம் நிகழும். ஆனால், அது தி.மு.க தலைமையில்தான் அமையும். மாநிலங்கள் மூலம் பெறப்பட்ட ஜிஎஸ்டி வரியை மாநிலங்களுக்குத் திருப்பி வழங்கவில்லை. இது ஒரு திவாலான அரசு. நாட்டு மக்கள் விரும்பிய அரசு வேறு. ஆனால் தற்போது அமித்ஷா - மோடி அரசு தான் நடைபெறுகிறது” என்றார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...