Monday, 13 January 2020

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் : பொதுமக்களுக்கு அ.ம.மு.க.வினர் உதவி


வாக்‍காளர் பட்டியலில் பெயர் சேர்க்‍க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. பொதுமக்‍களுக்‍கு வழிகாட்டும் வகையில், பல்வேறு உதவிகளை அ.ம.மு.க.வினர் செய்தனர்.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்‍குதல் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த 4, 5 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த முகாம் இன்றும் நடைபெற்றது. பொதுமக்‍களுக்‍கு வழிகாட்டும் வகையில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் கழகத்தினர் உதவி செய்தனர்.



இந்நிலையில், அண்ணாநகர் பகுதிக்‍கழகச் செயலாளர் திரு.கே.என்.குணசேகரன் ஏற்பாட்டின்பேரில், அண்ணாநகர், எம்.எம்.டி.ஏ காலனி உள்ளிட்ட 42 இடங்களில் நடைபெற்ற வாக்‍காளர் சிறப்பு முகாமில் பொதுமக்‍களுக்‍கு கழகத்தினர் உதவி செய்தனர். தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.சுகுமார் பாபு, மாவட்ட மகளிரணி துணைத்தலைவர் திருமதி.ஆர்.சித்ரா தேவி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் திருமதி.சித்ரா, வட்டச் செயலாளர்கள் திரு.ஏ.கலையரசன், திரு.செய்யது அலி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கு உட்பட்ட வாக்குச்சாவடிகளிலும், புதிய வாக்காளர் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை, திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.கே.ஏ. மலைமேகம், அம்பத்தூர் பகுதி கழகச் செயலாளர் திரு.எஸ்.வேதாசலம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெற்றியூர், மணலி எர்ணாவூர் ஆகிய பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பொன்ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் திரு.வி. ரவி, திருவொற்றியூர் மேற்கு பகுதிச் செயலாளர் திரு. கே. ஏ.குப்பன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.ஜே மதிவதனம், மாவட்ட மாணவரணி செயலாளர் திரு.கே. ராமன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.எஸ்.ஆ

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...