Monday, 13 January 2020

உயர்கல்வி வரை தாய்மொழியில் படிக்க வேண்டும் - மத்திய-மாநில அரசுகள் தாய் மொழிக்கல்வியை கொண்டுவர வேண்டும் : குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்


உயர்கல்வி வரை தாய்மொழியில் படிக்க வேண்டும் என்றும், மத்திய-மாநில அரசுகள் தாய் மொழிக்‍கல்வியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


சென்னை டி.டி.கே சாலையில் உள்ள நாரதகான சபாவில், ஸ்ரீராமகிருஷ்ணா மடம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்ய நாயுடு, ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்ய நாயுடு, அனைத்து மதங்களும் மகத்தானவை என்றும், பல்வேறு நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார். தாய்மொழி கல்வி அத்தியாவசிமானது என தெரிவித்த திரு.வெங்கய்ய நாயுடு, உயர்கல்வி வரை தாய்மொழியில் படிக்க வேண்டும் என்றும், இதற்கு மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...