நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சி.டி. மெய்யப்பன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment