Sunday, 26 January 2020

கண்ணை மறைத்த போதை.. சரக்கு பாட்டில் எங்கே.. சண்டை போட்ட தம்பி.. கத்தி குத்துக்கு பலியான அக்கா



சென்னை: "சரக்கு பாட்டில் எங்கே" என்று கேட்டு சொந்த அக்காவையே கத்தியால் தம்பி குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாரகேஸ்வரி.. 55 வயதாகிறது.. இவர் இலங்கையை சேர்ந்தவர். இவரது தம்பி குகதாசன்.. 49 வயதாகிறது.

இவர் இலங்கையில்தான் தங்கி உள்ளார்.. சில தினங்களுக்கு முன்பு சமீபத்தில், சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார்.. கோயிலுக்கும் போய்வந்த குகதாசன், அக்கா வீட்டில் சில நாட்களாக தங்கி இருந்தார்.

மது பழக்கத்துக்கு அடிமையானவர் குகநாதன்.. மாலை போட்டிருந்த நேரத்தில் தண்ணி அடிக்காமல் இருந்தவர், கோயிலுக்கு போய்வந்த பிறகு திரும்பவும் தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டார்.. சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு போய் 2 குவாட்டர் பாட்டில்களை வாங்கிவந்து, ஒன்றை குடித்துவிட்டு, இன்னொரு பாட்டிலை வீட்டில் மறைத்து வைத்துள்ளார்... முதலில் குடித்த போதை தெளிந்துவிடவும், இன்னொன்றை தேடியுள்ளார்.. ஆனால் அந்த பாட்டில் கிடைக்கவில்லை.

அதனால் சரக்கு பாட்டில் எங்கே, எங்கே ஒளிச்சு வெச்சிருக்கே என்று அக்காவிடம் கேட்டபோது, தனக்கு தெரியாது என்று அவர் சொல்லி உள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த குகதாசன், அக்காவிடம் சண்டைக்கு போய்விட்டார்.. அக்கா - தம்பி தகராறு முற்றியது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குகதாசன், கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து அக்காவை சரமாரி குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தார்.. இதை பார்த்து, தாரகேஸ்வரியின் தாயும், மகனும் குகதாசனை தடுக்க வந்தனர்.. ஆனால் அவர்களையும் கத்தியால் குத்தினார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வளசரவாக்கம் ஸ்டேஷனில் தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த பாட்டி - பேரன் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. தாரகேஸ்வரியின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.. போதை கண்ணை மறைக்க, சொந்த அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி குகதாசன் ஜெயிலில் உள்ளார்!

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...