Thursday, 19 December 2019

2.5 கோடி வியூஸ் கடந்து வைரல் ஹிட்டான ‘சும்மா கிழி’


ரஜினியின் தரபார் படத்திலிருந்து வெளியான ‘சும்மா கிழி' பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நட்பெற்றது. அதற்கும் முன்னதாகவே, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை இணையத்தில் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைப்பில் எஸ்.பி.பி பாடிய ‘சும்மா கிழி' எனும் பாடல் வைரல் ஹிட்டானது. அப்பாடல் வெளியாகி மூன்று வாரங்கள் ஆன நிலையில், தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது, இப்படல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...