Tuesday, 17 December 2019

திண்டிவனம் அருகே கார் விபத்து: ஒருவர் பலி, 3 பேர் பலத்த காயம்


திண்டிவனம் அருகே கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 72. ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர்.

இவர் வெளிநாட்டில் இருந்து வந்த தனது மகன் மருமகளை காரில் அழைத்துக்கொண்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திண்டிவனம் அருகே வந்தபோது முன்னால் சென்ற சொகுசு பேருந்து திடீரென பிரேக் போட்டதால் கார் மோதி விபத்துக்குள்ளானது.

அதே நேரத்தில் பின்னால் வந்த லாரியும் கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...