பென்னாகரம்: நிலத்தை பதிவு செய்ய, 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறி, சார்பதிவாளரை கண்டித்து, அலுவலகத்தை சிலர் முற்றுகையிட்டனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மூங்கில் மடுவுவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 40. இவர், தனது விவசாய நிலத்தை பத்திரப்பதிவு செய்ய, பென்னாகரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நிலத்தை பதிவு செய்ய சார்பதிவாளர், 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் லஞ்சம் தர மறுத்தார். இதனால், சார்பதிவாளர் லட்சுமிகாந்தன் அவரது நிலத்தை பதிவு செய்யாமல், ஒரு மாதமாக அலைக்கழித்து வந்தார். இந்நிலையில், நேற்று சார்பதிவாளர் அலுவலகம் வந்த கோவிந்தராஜ், லஞ்சம் கொடுத்து ஏமாந்த சிலர் இணைந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பென்னாகரம் எஸ்.ஐ., சென்றாய பெருமாள், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களை கலைந்து போக செய்தனர்.
No comments:
Post a Comment