Tuesday, 17 December 2019

இணையத்தை கலக்கும் தனுஷின் புதிய தோற்றம்


ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி வெற்றி கண்ட கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் 3 படப்பிடிப்பு லண்டனை களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ல‌ட்சுமி நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து 70 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் எஞ்சியுள்ள காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான படப்பிடிப்பு சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக தனுஷ் புது லுக்கில் நடித்து வருகிறார். தேவர்மகன் கமல் போன்ற தோற்றத்தில் இருக்கும் தனுஷின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...