காஞ்சிபுரம்: குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பதுதான் குடியுரிமையா என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், குடியுரிமை எனக் கூறி குடிமக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. குடிமக்களின் உரிமையை பறிப்பதுதான் குடியுரிமையா?
பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருவோரிடம், விஷத்தை கலக்குகிறது மத்திய அரசு. நாட்டை குட்டிச்சுவராக்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எதையும் செய்யாத, எதையும் சொல்ல முடியாத அரசு மத்தியில் நடக்கிறது என்று பேசினார்.
No comments:
Post a Comment