மதுரை: மதுரை மத்திய சிறையில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை அருகே கொடிமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்வம்(55). இவா் 6 மாதங்களுக்கு முன் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு சுவாசப் பிரச்னை இருந்து வந்தது. கடந்த வாரம் சுவாசப் பிரச்னை அதிகமானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இந்நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிப்படைந்ததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
No comments:
Post a Comment