திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்தை ஆயிரக் கணக்கான விவசாயிகள் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக வனத்திலிருந்து வரும் காட்டுப் பன்றிகள் கிராமங்களிலுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் காட்டுப்பன்றிகளை வனத்திற்குள் விரட்ட வேண்டும். பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குறிப்பாக காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உடுமலை வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் உடுமலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது
No comments:
Post a Comment