Friday, 13 December 2019

மயிலாடுதுறையில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் !!

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் அமைந்துள்ளது அவயாம்பாள் தெரு. இப்பகுதியில் கழிவு நீரானது சாலையில் தேங்கியிருப்பதால்,  இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது நடந்து செல்வோர்  மிகவும் அச்சத்துடனும் முகம் சுளிக்கும் படியும் நடந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் குழந்தைபேறு மருத்துவமனை உள்ளதால்  இந்தக் கழிவு நீரின் மூலம் வரும் துர்நாற்றம் பிறக்கும் குழந்தைகளுக்கு  நோய்களை உண்டு பண்ணும் விதமாக அமைந்துள்ளது என்றும், உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக போராளி
கண்ணகி ரவிச்சந்திரன்

1 comment:

  1. தேர்தல் வேலையில் எங்கே நடக்கும்

    ReplyDelete

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...