பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம் வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை, தெலங்கானா அரசு செயல்படுத்தி வருவதாக, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் பவள விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே, இறைவன் தமக்கு ஆளுநர் பதவியை தந்துள்ளதாகக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment