மதுரை ஒத்தக்கடை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மாலதி என்ற பயிற்சி மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நேரத்தில் பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை பயிற்சி மருத்துவர் மாலதி கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட, ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் தன்னுடைய காலில் அணிந்து இருந்த காலணியைக் கழற்றி, மருத்துவர் மாலதியைத் தாக்கி இருக்கின்றார்.
இதன் காரணமாக காயமடைந்த மருத்துவர் மாலதி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரைத் தாக்கியவர் பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பணியிலிருந்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய பெண்ணின் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment