Wednesday, 18 December 2019

பாரப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி: அ.தி.மு.க., மனுதாக்கல் நிராகரிப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, பாரப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு, 1996 முதல் நான்குமுறை நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த உமாசங்கர், தலைவராக தொடர்ந்து வெற்றி பெற்றார். அதில், 1996, 2006ல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இம்முறை, பாரப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு(பொது) ஒதுக்கப்பட்டது. இதனால், தி.மு.க., சார்பில், உமாசங்கரின் மனைவி இந்திராணி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, செல்வம் மனைவி லட்சுமி என்ற தேவி, பாரப்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். நேற்று, ஒன்றிய அலுவலகத்தில், மனு பரிசீலனை நடந்தது. அப்போது, வாக்காளர் பட்டியலில் தேவி என்றும், மனுவில், லட்சுமி என, கையெழுத்திடப்பட்டுள்ளதாலும், மனுவை தள்ளுபடி செய்ய, உமாசங்கர் உள்ளிட்டோர், அதிகாரிகளிடம் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால், அந்த மனுவை, அதிகாரிகள் நிராகரித்தனர். செல்லத்தக்க வேட்பு மனுக்களின் பட்டியலில், இந்திராணி, பாக்கியம் பெயர்களை மட்டும் அதிகாரிகள் வெளியிட்டனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...