டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து அவரிடம் பேசியுள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு இடம் ஒதுக்காதது குறித்து தமிழக எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக அரசு தமிழக மக்களுக்கு துரோகமிழைத்து வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேசியபோது ”மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் திமுக உதவுவது போல நாடகமாடுவதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமர் மோடியிடம் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment