Sunday, 26 January 2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் மோதல்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றியடைந்தவர் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து தோல்வி அடைந்தவரின் மகன் தகராறு செய்துள்ளார்.

பிரத்தியேக வாட்ஸ்ஆப் போன்ற செயலியை உருவாக்க இந்தியா திட்டம்!

அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பில் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ்ஆப் போன்ற பிரத்தியேக செயலியை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முக்கிய சோதனை முயற்சி தற்போது மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

'ஜிஐஎம்எஸ்' (அரசு உடனடி குறுஞ்செய்தி சேவை) என்று அந்த செயலியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் மின்னஞ்சல் சேவையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தேசிய தகவல் மையத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 2 கோடி மின்னஞ்சல்கள் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால் அரசாங்கத்துக்கான திறந்த மூல மென்பொருளை ஏற்றுக்கொள்வது குறித்த கொள்கைக்கு இணங்க திறந்த மூலத் தீர்வு மூலம் ஜிஐஎம்எஸ் வடிவமைக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் தீர்வு குறித்த அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது.

இதனை மாநில அரசுகள் தேவைப்பட்டால் அதிகாரப்பூர்வமாக அரசு ரீதியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ் என இரண்டிலும் இயங்குதளங்களில் பயன்படுத்தும் முறையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சிபிஐ, ரயில்வேத்துறை, கப்பல்படை, தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் உள்ளிட்ட 17 அரசுத்துறைகள் இந்த செயலியின் பயன்பாட்டில் இணைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சோதனைகளின் அடிப்படையில் 6,600 பயனாளர்கள் மூலம் 20 லட்சம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒடிஸா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சைபர் கிரிமினல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில் அரசுத்துறைகள் சார்பில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் மற்றும் வீசேட் உள்ளிட்ட செயலிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது. ஏனெனில் இதன்மூலம் அரசு சார்பில் முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்று முன்னாள் சைபர் பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்- விசாரணைக்கு ரஜினிகாந்த் அழைப்பு?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேவைப்பட்டால் நடிகர் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைப்போம் என ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் 18-ம் கட்ட விசாரணை நேற்று நிறைவடைந்தது.

சம்பவத்தன்று இச்சம்பவத்தை பதிவுசெய்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் நேற்று விசாரிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியதாவது:

125 பக்க பிரமாண வாக்குமூலம்

துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை 445 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த அமர்வில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆஜராகி 125 பக்கங்கள் கொண்ட பிரமாண வாக்குமூலம் மற்றும் அவர் வெளியிட்ட 5 தொகுப்புகள் கொண்ட அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முந்தைய ஒருவார காலத்தில் ஆட்சியர் அலுவலக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூடு தொடர்பாக அப்போது தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் ஒருசில செய்திகளை குறிப்பிட்டுள்ளார்.

சாட்சிகள் வலியுறுத்தல்

அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று, ஆணையத்தில் சாட்சிகளாக ஆஜரானவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேவைப்பட்டால் ரஜினிகாந்துக்கு அழைப்பாணை அனுப்பப்படும்.

இவ்வாறு ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் கூறினார்.

மாற்றியோசி... இலவச ஹெல்மெட் விநியோகித்த உதயநிதி ரசிகர் மன்றத்தினர்...!

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான சைக்கோ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்ததை அடுத்து அவரது ரசிகர் மன்றத்தினர் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினர்.

வழக்கமாக வெள்ளிக்கிழமை தோறும் எந்த நடிகரின் படம் வெளியாகிறதோ அந்த நடிகரின் ரசிகர்கள் பால் அபிஷேகம், கட் அவுட்டுக்கு மாலை என்று தான் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இதனால் யாருக்கும் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை என உணர்ந்த உதயநிதி ரசிகர் மன்றத்தினர, இலவச ஹெல்மெட் விநியோகத்தை கையில் எடுத்தனர். மேலும், தனது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம், மாலை என எதுவும் வேண்டாம் என்று ஏற்கனவே கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார் உதயநிதி.

இதனால், சற்று வித்தியாசமாக பொதுமக்களுக்கு பயனுள்ள காரியத்தை செய்ய வேண்டும் என எண்ணிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள் இலவச ஹெல்மெட் விநியோகம் செய்யலாம் என முடிவெடுத்தனர். அதன்படி சென்னை சத்யம் திரையரங்கம் முன்பாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பாபு, வினோத் உள்ளிட்டோர் இலவச ஹெல்மெட் விநியோகத்தை துவக்கி வைத்தனர்.

கடந்த 24-ம் தேதி வெள்ளிக்கிழமை முழுவதும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் என பல பகுதிகளில் இலவச ஹெல்மெட் விநியோகம் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய நடைமுறை அமலில் உள்ளதால், இலவச ஹெல்மெட்டை போட்டிபோட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் வாங்கிச் சென்றனர்.

இது குறித்து நம்மிட பேசிய உதயநிதி ஸ்டாலின் தீவிர ரசிகர் வினோத், மற்றவர்களை போல் பட்டாசுகளை வெடித்தோ, பால் அபிஷேகம் செய்தோ, ஆடம்பர முறையில் பட வெளியீடு விழாவை நாங்கள் கொண்டாடுவதில்லை. உதயநிதி திரைப்படம் திரைக்கு வரும் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு பயனுள்ள காரியத்தை மட்டுமே ஆற்றிவருகிறோம் எனத் தெரிவித்தார்.

குடியரசு தினம்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தேசிய கொடியை ஏற்றினார் கே.வீ. தங்கபாலு


நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சி.டி. மெய்யப்பன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி மற்றும் துறைகளின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

டாஸ்மாக் கடைகளை தங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம்: சேலம் மாவட்டம் புலாவாரி உள்ளிட்ட கிராமங்களில் 8 வலைச்சாலைக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டது. டாஸ்மாக் கடைகளை தங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி


சென்னை: சென்னையில் துக்ளக் இதழ் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடைபெற்றுள்ளது. மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லம் அருகே அதிகாலை 3 மணிக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர்.

முதல்-அமைச்சர் ஆகும் யோகம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை- அமைச்சர் கருப்பணன் பேச்சு




ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் அம்மாபேட்டையில் உள்ள அந்தியூர் ரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமை தாங்கினார். முன்னாள் எம்பியும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான என்.ஆர்.கோவிந்தராஜர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார்.

எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுக நூறாண்டு கால கட்சி. அ.தி.மு.கவில் யார் வேண்டுமானாலும் முதல் அமைச்சர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம்,சேர்மன் ஆகலாம், பஞ்சாயத்து தலைவர் ஆகலாம் நான் அமைச்சர் ஆவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் நான் இன்று அமைச்சராக உள்ளேன்.

தி.மு.க.வில் அப்படியில்லை அது குடும்ப கட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், உதயநிதி, பிறகுஅவரது மகன் இப்படி அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள், அதே போல் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஒன்றியங்களிலும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் கட்சி பொறுப்பிலோ அல்லது மற்ற அரசு பொறுப்பிலோ இருப்பார்கள். முதலமைச்சர் ஆகும் கனவில் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆனால் அவருக்கு அந்த யோகம் இல்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது

தமிழகத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகஅரசு செய்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்து 39 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்தனர்.

ஆனால் 39 பைசாவிற்கு கூட பிரயோஜனம் இல்லை. அதை தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மக்கள் புரிந்து கொண்டனர் அதனால் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் அதிமுக கைபற்றியது.இங்குள்ள ஒருசில எம்எல்ஏக்களால் 100 சதவீதம் பெற வேண்டிய வெற்றி பறி போனது.

கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் நல்லா இருக்க முடியாது. சில அதிமுக வினாரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்ப்பட்டு வருகிறது.

மக்களுக்கு தெரியும் யார் கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் என்று?

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பக்கம் விஜய், இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி: மிரட்டும் மாஸ்டரின் மூன்றாவது லுக்




லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என நடிகர் பட்டாளமே நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து, ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக தளபதி-64 என தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டது.

இதையடுத்து, பொங்கல் பரிசாக மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு கடந்த 15-ஆம் தேதி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தின் மூன்றாவது லுக் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியாகும் என படக் குழு நேற்று அறிவித்தது. இதன்படி, இது தற்போது வெளியாகியுள்ளது.

முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது லுக்கில் விஜய் சேதுபதியும் இடம்பெற்றுள்ளார். இதன் ஒரு பக்கத்தில் விஜய்யும், மற்றொரு பக்கத்தில் விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெளியானதையடுத்து, மாஸ்டர் மூன்றாவது லுக் எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை வாங்க சேர்ந்து எதிர்ப்போம்.. தமிழக அரசுக்கு திமுக எம்பி கனிமொழி அழைப்பு


தூத்துக்குடி: ஹைட்ரோகார்பன் திட்டத்தை திமுகவுடன் சேர்ந்து எதிர்க்க முன்வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக எம்பி கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார. மக்களின் எதிர்ப்பை மீறி அத்திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்று அரசாணை வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். தனது கடிதத்தில் மக்களின் கருத்தை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுததினார்.

இந்நிலையில் குடியரசுத்தின விழாவை தனது சொந்த தொகுதியான தூத்துக்குடியில் எம்பி கனிமொழி இன்று கொண்டாடினார. திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் திருச்செந்தூர் அருகே உள்ள மேல ஆத்தூரில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுடன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி. ஹைட்ரோ கார்பன் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தாதது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல். ஹைட்ரோகார்பன் திட்டத்தை திமுகவுடன் சேர்ந்து தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்றார். தவறான சட்டம் என்று தெரிந்தால் யார் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்: என்றும் கனிமொழி எம்பி வலியுறுத்தினார்.

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...